சென்னை: சின்னத்திரை நடிகை சித்ரா 2020 டிசம்பரில் ஹோட்டலில் இறந்து கிடந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக சித்ராவின் கணவர் ஹேம்நாத் உட்பட 7 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம் ஹேம்நாத்தை விடுதலை செய்ய உத்தரவிட்டதை எதிர்த்து சித்ராவின் தந்தை காமராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
அதில், அரசு தரப்பு சாட்சிகளின் வாக்குமூலங்களை விசாரணை நீதிமன்றம் சரியாக பரிசீலிக்கவில்லை.
எனவே ஹேம்நாத்தை விடுதலை செய்ய வேண்டும் என்றும், திருவள்ளூர் மகளிர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.