சென்னை: கற்றாழை பூக்கும் தாவர இனத்தைச் சேர்ந்த ஒரு பேரினமாகும். கற்றாலையை வேறு பெயர்களைக் கொண்டும் அழைக்கப்படுகிறது சோற்றுக்கற்றாழை, சிறு கற்றாழை, பெரும் கற்றாழை, பேய்க் கற்றாழை, கருங் கற்றாழை, செங்கற்றாழை என பல பெயர்களை கொண்டு அழைக்கப்படுகிறது.
கற்றாழை லில்லியேசி தாவர குடும்பத்தை சேர்ந்தது இது ஆப்பிரிக்காவை தாயகமாகக் கொண்டது மேலும் கிரேக்கம், பார்படோ தீவுகள், சீனா, இத்தாலி, வெனிசுலா, தென்னாபிரிக்கா, இந்தியா, வங்காளதேசம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இயற்கையாக வளரும் தாவரம் ஆகும் .
இது ஆற்றங்கரைகளிலும் சதுப்பு நிலங்களிலும் தோட்டங்களிலும் பயிராகும். இதன் நுனியில் பெரும்பாலும் சிறு முட்களுடன் காணப்படும். இதன் மடல் வேர் ஆகியவை மருத்துவப் பயனுள்ளவை.
அழகு சாதன பொருட்கள் தயாரிப்பிலும் சித்த மருத்துவத்திலும் கருப்பை தொடர்பான பல்வேறு நோய்களுக்கும் கற்றாழை பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. லாய்ன் எனும் வேதிப்பொருளானது அலோ வீரா-வில் 50 சதவிகிதமும், அலோ பெரி-யில் 25 முதல் 28 சதவிகிதமும், அலோ பெராக்ஸ்-ல் 10 சதவிகிதமும் உள்ளது.
இத்தகைய அலாய்ன் எனும் வேதிப்பொருளில்தான் பார்பலின், பென்டோசைட்ஸ், ரெசின் மற்றும் சப்போனின் போன்றவை உள்ளடங்கியுள்ளன. இத்துடன் சோற்றுக்கற்றாழையின் சாற்றில் நிறமேற்றிகளான ஆந்த்ரோகுயினோன் மற்றும் குயினோன்கள் உள்ளன.
சோற்றுக்கற்றாழை இலைகளின் கூழ்மத்திலிருந்து (Gel) பெறப்படும் திரவ பானத்தில் கால்சியம், குளோரின், சோடியம், பொட்டாசியம் மற்றும் மாங்கனீசு போன்ற சத்துகள் உள்ளன. மேலும் அலோ கூழ்மத்தில் வைட்டமின் ஏ, பி1, பி2, பாலிசாக்கரைடுகள் மற்றும் யூரிக் அமிலம் போன்றவகைகளும் உள்ளன.
சருமத்தை பொலிவு பெறச் செய்யும் கற்றாழை: உங்கள் முகம் பொலிவிழந்து காணப்பட்டால் அதற்கு கற்றாழை ஒன்றே போதும் முகத்தை ஜொலிக்க செய்ய கற்றாழை ஃபேஸ் பேக்காக பயன்படுத்தும்போது முகத்தில் உள்ள கருமை மாறி முகம் பளிச்சிடும்.
கற்றாழையை முகத்திற்கு எப்படி பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம் வாருங்கள் ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த கற்றாழை ஜெல் அதனுடன் கடலை மாவு இரண்டையும் நன்றாக கலந்து முகத்தில் ஃபேஸ் பேக் போட வேண்டும். 15 நிமிடங்கள் இந்த ஃபேஸ் பேக்கை காய விட வேண்டும் பின்பு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதால் முகத்தில் உள்ள கருமை நிறம் மாறி முகம் பளிச்சிடும்.