சமீபத்தில் “தக் லைப்” படத்திற்கான வேலைகளை முடித்துள்ள கமல்ஹாசன், 3 மாத படிப்பிற்காக அமெரிக்கா சென்றுள்ளார். தமிழ் சினிமா மட்டுமின்றி உலக சினிமாவையும் உயர்த்தியவர் கமல்ஹாசன் என்பதில் சந்தேகமில்லை. டெக்னிக்கலாகவும், கதை சொல்லவும் கமலுக்கு எல்லாத் திறமையும் உண்டு.
1997 ஆம் ஆண்டு அவரது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் மூலம் “மருதநாயகம்” படத்திற்கு அடித்தளம் போடப்பட்டது. தற்போது 27 வருடங்கள் கழித்து படத்தை ரீஷூட் செய்ய ஆர்வமாக உள்ளாராம். இதற்குக் காரணம், கமல்ஹாசனின் தரமான கதை அம்சங்களும், தொழில்நுட்பமும் இணைந்த கலவையை உலகுக்குக் கொண்டு செல்வதுதான்.
மருதநாயகம் பிள்ளை 1725 இல் பிறந்தார். கிழக்கிந்திய கம்பெனியின் படைகளின் தலைவராக இருந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போரிட்டவர். கமல்ஹாசன், தனது கதையை திரைப்படமாக எடுப்பதில், மருதநாயகத்தின் ஆட்சி, போராட்டங்கள் மற்றும் அவரது இறுதி நாட்களை வெளிப்படுத்த விரும்புகிறார்.
படத்தின் 30 சதவீத வேலைகள் முடிவடைந்த நிலையில், தற்போதைய AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி செலவுகளைக் குறைக்க அல்லது படத்தின் மற்ற அம்சங்களை மேம்படுத்த அவர் எதிர்பார்க்கிறார்.