சென்னை: அனுமதிச் சீட்டு விளம்பரம் காட்டிய பேருந்து ஓட்டுநருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என போக்குவரத்து துறை அமைச்சருக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர் சம்மேளன பொதுச்செயலாளர் டி.வி.பத்மநாபன் கடிதம் அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:- அரசு போக்குவரத்து கழக பஸ்சில் டிரைவர் தன்னிச்சையாக விளம்பரம் செய்ய முடியாது. சினிமா உள்ளிட்ட விளம்பரங்கள் பல்வேறு அலுவலக நடைமுறைகளின் கீழ் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.
ஆனால் ஓட்டுநருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல், உள்ளூர் போக்குவரத்து ஆய்வாளர்கள் சத்தம் எழுப்புவதற்கு தடை விதிக்கப்படாத பகுதிகளில் சத்தம் போட்டால் அபராதம் விதிக்கின்றனர்.
சமீபத்தில் திருச்சி மண்டலத்திற்கு உட்பட்ட புறநகர் கிளை பேருந்து ஓட்டுநருக்கு மேற்கண்ட காரணத்தை கூறி ரூ.1500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் நடக்கும் நிகழ்ச்சிக்கு ஓட்டுநரை மட்டும் பொறுப்பேற்று நடத்துவதை ஏற்க முடியாது.
இப்பிரச்னையில் தலையிட்டு, இனி வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க, வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.