சென்னை: கோயம்பேடு மார்க்கெட்டில் பொதுமக்கள் அதிகம் வாங்கும் காய்களில் கத்தரிக்காய் முதன்மையானது.
திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கோயம்பேடு சந்தைக்கு வருகிறது. கடந்த ஒரு வாரமாக கத்தரிக்காய் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கத்தரிக்காய் விலை குறைந்து வருகிறது.
கடந்த வாரம் கிலோ ரூ.20-க்கு விற்றது, நேற்று ரூ.10 ஆக சரிந்தது. திருவல்லிக்கேணி ஜாம்பஜார், சைதாப்பேட்டை மார்க்கெட், அரும்பாக்கம் மார்க்கெட், பெரம்பூர் மார்க்கெட் போன்ற சில்லரை சந்தைகளில் கிலோ ரூ.20-க்கு விற்கப்படுகிறது.
மற்ற காய்கறிகளான பெரிய வெங்காயம் ரூ.44, முருங்கை ரூ.40, தக்காளி ரூ.33, பீன்ஸ், சாம்பார் வெங்காயம் கிலோ ரூ.30, உருளைக்கிழங்கு ரூ.28, கேரட் ரூ.25, அவரைக்காய், நூக்கல் ரூ.20, பீட்ரூட், பாகற்காய், பச்சை மிளகாய் தலா ரூ.15-க்கும், முட்டைகோஸ், முள்ளங்கி, புடலங்காய், வெண்டைக்காய் தலா ரூ.10-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.