சென்னை: முழு நேர சினிமாவில் இருந்து விலகி, முழு நேர அரசியலில் இறங்க தயாராகி வருகிறார் விஜய். இவர் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு அக்டோபர் 27ம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது.விஜய் படங்களுக்கு பல தடைகள் உள்ள நிலையில், இனிமேலும் அவரது மாநாட்டுக்கும் தடை வர வாய்ப்பு உள்ளதாக கணிப்புகள் வெளியாகி உள்ளது.
ஏ.வினோத் இயக்கும் படத்தின் மூலம் சினிமாவுக்கு முழுக்கு போட்டு முழுநேர அரசியலில் இறங்கவுள்ளார் நடிகர் விஜய். 2026 சட்டசபை தேர்தலை குறிவைத்து கட்சிக்காக உழைத்து வருகிறார். மாநாடு தொடர்பாக 25க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தவேக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மாவட்டம் வாரியாக பயணம் செய்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். விக்கிரவாண்டியில் பூமிபூஜையுடன் பணிகள் தொடங்கும் என்றும், மாநாட்டுக்கு போலீசார் 33 நிபந்தனைகளை விதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
விஜய்யின் அரசியல் பிரவேசத்தால் உதயநிதி துணை முதல்வராக பதவியேற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. விஜய் VS உதய்க்கு 2026 அரசியல் களம் அமைக்கப்பட்டுள்ளது.
எனவே, மாநாடு நடக்கும் இடத்துக்கு வாகனங்கள் செல்ல முடியாமல் நெரிசலில் சிக்கித் தவிப்பதைத் தடுக்க வியூகம் வகுக்கப்பட்டுள்ளது. மாநாட்டுக்கு வரும் அனைத்து வாகனங்களின் பதிவு எண், ஆர்.சி., இன்சூரன்ஸ் உள்ளிட்ட ஆவணங்களை கட்சி தலைமைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகனங்கள் சிக்கினால், பிரச்னையை சரி செய்ய வழக்கறிஞர்கள் குழுவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தன்னார்வலர்களுக்கு மாவட்ட வாரியாக வழக்கறிஞர் குழுவின் தொடர்பு எண்கள் வழங்கப்படும்.
மாநாட்டுக்கு 6,000 – 10,000 தன்னார்வலர்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை முடக்க ஆளுங்கட்சி முயற்சிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.