தமிழ் சினிமாவின் முதல் திருநங்கை இயக்குனர் சம்யுக்தா விஜயன் இயக்கி நடித்த படம் ‘நீல நிற சூரியன்’.
ஃபர்ஸ்ட் காபி புரொடக்ஷனின் கீழ் மாலா மணியன் தயாரித்துள்ள இதில் கீதா கைலாசம், கஜராஜ், மஷாந்த் ஆகியோர் நடித்துள்ளனர்.
ஸ்டீவ் பெஞ்சமின் இசை, ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு ஆகியவற்றைக் கையாளுகிறார். அக்டோபர் 4-ம் தேதி வெளியாகும் இந்தப் படம் பற்றி சம்யுக்தா விஜயன் கூறும்போது, “ஒரு ஆண் பெண்ணாக மாற விரும்புவது மட்டுமல்ல, நம் சமூகம் அவர்களை எப்படிப் பார்க்கிறது?
எந்த நாடகமும் இல்லாமல் அவர்கள் அதை எவ்வாறு சமாளித்தார்கள் என்பதை நான் உணர விரும்பினேன். அதுதான் இந்தப் படம். பல சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று பாராட்டுகளை பெற்றுள்ளது,” என்றார்.