சென்னை: இளம் பருவத்தில் ஹார்மோன் மாறுபாடுகளால் பருக்கள் ஏற்படுவது சகஜமான விஷயம். இந்த பருவத்தில் நமக்கு வந்த பருக்கள் குறித்து சரியான பராமரிப்புக்களை மேற்கொண்டிருக்கமாட்டோம்.
இதனால் பருக்கள் நாளாடைவில் தழும்புகளாக மாறிவிடுகின்றது. இதனை போக்க கண்ட கண்ட கிரீம்களை வாங்கி பயன்படுத்த வேண்டும் என்ற அவசியமில்லை.
வீட்டில் இருக்கும் இயற்கை பொருட்களை கொண்டு எளிய முறையில் போக்க முடியும். தற்போது அவை என்ன என்பதை பார்ப்போம்.
தேவையானவை
கருவேப்பிலை -20 கிராம்
கஸ்தூரி மஞ்சள் -20 கிராம்
எலுமிச்சை-1 (முழுப்பழம்)
கசகசா -20 கிராம்
செய்முறை
முதலில் மேல்குறிப்பிட்டுள்ள பொருட்களை அரைத்து ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும்.இதை 2 மணி நேரம் முகத்தில் பூசி வெந்நீரால் கழுவி விட வேண்டும்.
இதை 48 நாட்களுக்கு தொடர்ந்து பண்ண முகத்தில் உள்ள தழும்புகள் மற்றும் பருக்கள் முற்றிலும் மறைந்து விடும்.
குறைந்தபட்சம் 6 மாதங்கள் இதை பண்ணலாம் ஒரு சிலருக்கு மட்டுமே 48 நாட்களில் பலன் கிடைக்கும்.