சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கை:-
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ., பரப்பும் பிரசாரத்தை முறியடிக்கும் வகையில், தேசிய விழிப்புணர்வு நடைபயணம், அக்., 2-ம் தேதி முதல், 9-ம் தேதி வரை, தமிழகத்தில் நடக்கிறது.
விழிப்புணர்வு நடைபயணத்தில் சசிகாந்த் செந்தில் எம்.பி., துரை சந்திரசேகர் எம்.எல்.ஏ., டி.எல்.சதாசிவலிங்கம், திருவள்ளூர் தெற்கு முன்னாள் எம்பி ஏ.செல்லக்குமார், ஆவடி மேயர் கீசனூர் ராஜேந்திரன், வடசென்னை கிழக்கு முன்னாள் எம்எல்ஏ உ.பலராமன், மேற்கு சென்னை இமையா கக்கன், மத்திய சென்னை கிழக்கு சொர்ண சேதுராமன், மத்திய சென்னை மேற்கு நாசே ஜெ. ராமச்சந்திரன், தென் சென்னை கிழக்கு ஜே.எம்.ஹெச். அசன் மௌலானா எம்.எல்.ஏ., தென் சென்னை மதி டாக்டர். கே.விஜயன், தென் சென்னை மேற்கு முன்னாள் எம்.பி. கே.ராணி, செங்கல்பட்டு வடக்கு பீட்டர் அல்போன்ஸ், செங்கல்பட்டு தெற்கு. அருள் அன்பரசு, காஞ்சிபுரம் பி.விஸ்வநாதன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.