பெரியகுளம்: பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள கும்பக்கரை அருவியில் மழை இல்லாததால் நீர்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளது.
இந்நிலையில், கடந்த 2 நாட்களாக அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளான வட்டக்கானல், வெள்ளகேவி, மேற்கு தொடர்ச்சி மலை போன்ற பகுதிகளில் மழை பெய்து வருவதால் நீர் வரத்து அதிகரித்து அருவியில் தண்ணீர் கொட்டுகிறது.
இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்போது பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை என்பதால் வெப்பத்தின் தாக்கத்தை தணிக்க கும்பக்கரை அருவிக்கு நேற்று முதல் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.