சென்னை: தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-
குமரி கடல் மற்றும் தமிழகத்தின் உள்பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் கோவை மாவட்டம் மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்து வருகிறது.
கோவை மாவட்டம் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர் மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும். ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், தேனி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், இரணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் நாளை மறுநாள் கனமழை பெய்யும்.
புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய 4 மாவட்டங்களிலும் கனமழை பெய்தது.
புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய மாவட்டங்களிலும் கடந்த 5-ம் தேதி கனமழை பெய்தது.
தமிழகம், புதுவை, காரைக்காலில் 6 மற்றும் 7-ம் தேதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35* செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27° செல்சியஸாகவும் இருக்கும்.
அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35°C ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27°C ஆகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.