இந்தி நடிகை தனுஸ்ரீ தத்தா கடந்த 2018-ம் ஆண்டு நடிகர் நானா படேகர் மீது பாலியல் புகார் அளித்தார்.
‘ஹார்ன் ஓகே ப்ளீஸ்’ என்ற இந்தி படத்தில் நடிக்கும் போது தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக நானா படேகர் மீது போலீசில் புகார் அளித்தார்.
நானா படேகர் சமீபத்தில் அளித்த பேட்டியில், “அதெல்லாம் பொய். உண்மை என்னவென்று எனக்குத் தெரியும். இதற்கு நடிகை தனுஸ்ரீ தத்தா நீண்ட பதிவில் பதிலளித்துள்ளார்.
அதில் அவர், “எனது புகாருக்கு பதிலளிக்க 6 ஆண்டுகள் ஆனது ஏன்? கடந்த சில வருடங்களாக தெரியாத நபர்களால் நான் கடுமையாக துன்புறுத்தப்பட்டேன். நான் எங்கு சென்றாலும் சிலர் பின்தொடர்ந்தனர்.
எனக்கு திடீர் விபத்துகள் ஏற்பட்டன. என்னைச் சுற்றி விசித்திரமான விஷயங்கள் நடந்துகொண்டிருந்தன. நான் உயிர் பிழைத்தேன். இப்போது அவர் பயந்துவிட்டார். இந்தி திரையுலகில் அவருக்கு ஆதரவாக இருந்தவர்கள் அவரை ஓரங்கட்டி விட்டனர்.
நானா படேகர் ஒரு பொய்யர். நடிகை டிம்பிள் கபாடியா கூட யூடியூப் பேட்டியில் அவரை ‘கேவலமானவர்’ என்று அழைத்தார். அவரும் பொய் சொன்னாரா?” என்று கேட்டுள்ளார்.