மதுரை: பெண் சிசு கொலைக்கு ஆதரவாக இருப்பவர்களே பெண்கள் தான் என்று மதுரை ஆட்சியர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
காந்தி ஜெயந்தியையொட்டி, மதுரை மாவட்டம் சேடபட்டி ஊராட்சி சமுதாய கூடத்தில் ஆட்சியர் சங்கீதா தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
இதில், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க வலியுறுத்தி உறுதி மொழி எடுக்கப்பட்டது. இதையடுத்து பேசிய ஆட்சியர், மதுரையில் பெண்சிசு கொலை மீண்டும் அதிகரித்துவருவதாக தெரிவித்தார்.