இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்களுக்கு அப்பால், இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான புதிய மோதல்கள் தீவிரமடைந்துள்ளன. ஈரானுக்கு ஆதரவான ஹெஸ்புல்லா அமைப்பின் தலைவர் மற்றும் இராணுவத் தளபதிகள் கடமையின் போது இஸ்ரேலால் கொல்லப்பட்டதை ஈரான் தனது அரசியலுக்கு பெரும் அவமானமாக கருதுகிறது.
இதனால், இஸ்ரேல் மீது நேரடித் தாக்குதல் நடத்த ஈரானின் முடிவு போர் பதற்றத்தை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதற்கிடையில், படிப்பு மற்றும் வேலை தொடர்பான காரணங்களுக்காக ஏராளமான இந்தியர்கள் இஸ்ரேலில் உள்ளனர். அவர்களது குடும்பத்தினர் இங்கு கவலையடைந்துள்ளனர்.
இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருப்பதாக இஸ்ரேல் தூதர் ரேவன் அசார் உறுதி அளித்துள்ளார். அவர்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றார். இஸ்ரேல்-ஈரான் போர் காரணமாக இந்திய பங்குச்சந்தைகளில் முதலீட்டாளர்கள் 10 லட்சம் கோடி ரூபாய் வரை நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.
அதே சமயம் ஆசிய பங்குச்சந்தைகளிலும் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 1,769 புள்ளிகள் சரிந்து 82,497 புள்ளிகளில் நிறைவடைந்தது.
சண்டை தொடர்ந்தால், அது பொருளாதாரத்தில் இன்னும் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர். முக்கிய நிறுவனங்களின் பங்குகள் பெரும் சரிவைச் சந்தித்து ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே லாபம் ஈட்டியுள்ளன.
இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நிலவும் பிரச்னை அங்கு வசிக்கும் இந்தியர்களின் நிலையை கடுமையாக பாதிக்கும் என்றாலும், பாதுகாப்பு உறுதி என்று கூறப்படுகிறது.