சென்னை: பண்டிகை காலத்தை முன்னிட்டு சென்னையில் இருந்து கோவை, நாகர்கோவில், தூத்துக்குடி, போத்தனூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
அதன்படி, கோவை – சென்னை எழும்பூர் விரைவு சிறப்பு ரயில் (கார் எண்.06171) கோவையில் இருந்து இன்று (6-ம் தேதி) இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு நாளை (7-ம் தேதி) காலை 8.30 மணிக்கு எழும்பூரை வந்தடையும்.
அடுத்த திசையில், இந்த ரயில் (06172) நாளை காலை 10.30 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு அன்று மாலை 6 மணிக்கு போத்தனூர் சென்றடையும். அதேபோல், சென்னை சென்ட்ரல் – நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில் (06178) வரும் 9-ம் தேதி இயக்கப்படுகிறது.
இந்த ரயில் சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.50 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும். இந்த ரயில் (06179) நாகர்கோவிலில் இருந்து 10-ம் தேதி இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.25 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்றடையும்.
அதேபோல், சென்னை சென்ட்ரல் – தூத்துக்குடி சிறப்பு ரயில் (06186) நாளை (8-ம் தேதி) சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 1.50 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும்.
எதிர் திசையில் இந்த ரயில் (06187) தூத்துக்குடியில் இருந்து 9-ம் தேதி மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.55 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்றடையும்.
மேலும் திருச்சி-தாம்பரம் இடையே திங்கள், புதன், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் 11-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை சிறப்பு ரயில் இயக்கப்படும்.
இந்த சிறப்பு ரயில் (06190) திருச்சியில் இருந்து காலை 5.35 மணிக்கு புறப்பட்டு அன்றைய தினம் மதியம் 12.30 மணிக்கு தாம்பரம் சென்றடையும். இந்த ரயில் (06191) தாம்பரத்தில் இருந்து மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு இரவு 11.35 மணிக்கு திருச்சி சென்றடையும்.
இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. திருப்பதி பிரம்மோற்சவ விழாவையொட்டி, பக்தர்கள் வசதிக்காக சென்னை சென்ட்ரல் – ரேணிகுண்டா இடையே மெமூ மின்சார ரயில் இயக்கப்படுகிறது.
இந்த ரயில் இன்று மதியம் 2.45 மணிக்கு புறப்பட்டு மாலை 5.45 மணிக்கு ரேணிகுண்டா சென்றடையும். ரேணி குண்டாவில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு இரவு 8.50 மணிக்கு சென்னை சென்ட்ரலை சென்றடையும்.