நிறுவனம் ‘தி பிக் ஷார்ட்ஸ் சேலஞ்ச்’ என்ற குறும்பட போட்டியை நடத்தி வருகிறது. அதன் விளம்பர தூதராக நடிகை சாக்ஷி அகர்வால் இணைந்துள்ளார்.
இதன் தமிழ் பதிப்பின் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. சாக்ஷி அகர்வால் கூறும்போது, “இந்தத் தளம் புதிய திறமைகளைக் கண்டறியவும், ஆர்வமுள்ள படைப்பாளிகள் தங்கள் கதைகளைப் பகிர்ந்துகொள்ளவும் ஒரு தளத்தை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தத் தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ள குறும்படப் போட்டிக்கு, உங்கள் குறும்படங்களை gp@abctalkies.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும். 10ம் தேதிக்குள் அனுப்பலாம்.
வெற்றியாளர் அடுத்த ஆண்டு ஜனவரி 15 அன்று அறிவிக்கப்படும். அதிகம் பார்க்கப்பட்ட படம் மற்றும் அதிக வசூல் செய்யும் படத்துக்கு தலா ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும்” என்றார்.