கோலாப்பூர்: மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் நேற்று நடந்த அரசியல் சாசன மரியாதை மாநாட்டில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது பேசிய ராகுல் காந்தி, “ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது இரண்டு அம்சங்களைக் கொண்டது.
ஒன்று ஒவ்வொரு சமூகத்தினதும் மக்கள்தொகையைக் கண்டறிவது மற்றொன்று அவர்கள் எவ்வளவு பொருளாதாரம் வைத்திருக்கிறார்கள் என்பதைக் கண்டறிவது. பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் ஆகிய இரண்டும் ஜாதி வாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பை எதிர்க்கின்றன. ஏனென்றால் உண்மை வெளிவருவதை இருவரும் விரும்பவில்லை.
தலித்துகள் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட மக்களின் வரலாறு இப்போது பள்ளிகளில் கற்பிக்கப்படுவதில்லை. அவர்களின் வரலாற்றை அழிக்கும் முயற்சிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
காங்கிரஸ் மற்றும் அகில இந்திய கட்சிகள் ஜாதி வாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பை செயல்படுத்த சட்டங்கள் இயற்றப்படுவதை உறுதி செய்யும். லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் இடஒதுக்கீடு மீதான 50 சதவீத உச்சவரம்பை நீக்குவதை உறுதி செய்வோம்,” என்றார்.
தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, “பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவது வேதனை அளிக்கிறது. அக்னி பிரதாரி திட்டம் ராணுவ வீரர்களின் ஓய்வூதியம், இழப்பீடு போன்றவற்றை பறிக்கும் தந்திரம் என்று மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சித்தார்.