சென்னை: வேண்டும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர் சம்மேளனம் (ஏஐடியுசி) வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து, சங்கத்தின் பொதுச் செயலர் ஆர்.ஆறுமுகம், போக்குவரத்துத் துறை செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
தமிழகம் முழுவதும் சுமார் 1.20 லட்சம் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 2023-24-ம் நிதியாண்டில், போக்குவரத்துக் கழகங்களில் சட்டப்படியான குறைந்தபட்ச ஊதியத்துடன் போனஸ் மற்றும் கருணைத் தொகையைச் சேர்த்து, அதன்படி 25 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும்.
மேலும், 2023-24 நிதியாண்டில் 30 நாட்களுக்கு மேல் பணிபுரிந்த காவலாளிகள், கேன்டீன் பணியாளர்கள், பஸ் பாடி கிளீனர்கள், சுகாதாரப் பணியாளர்கள், பேருந்து நிலையங்களில் பணிபுரியும் டிக்கெட் கன்வர்சர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் சட்டப்படி போனஸ் வழங்க வேண்டும்.
அரசு போக்குவரத்து கழகங்களில் கடந்த நிதியாண்டில் குறைந்தபட்ச ஊதியம் போனஸ் வித்தியாசம், நிலுவை தொகை உள்ளிட்டவை சட்டப்படி கணக்கிட வேண்டும்.
இது தொடர்பாக தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.