கடலூர்: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு கடலூர் கிழக்கு மாவட்ட காமக சார்பில் கடலூர் அருகே உள்ள நாணல்மேடு கிராமத்திலும், குறிஞ்சிப்பாடி தொகுதி மணக்குப்பம் கிராமத்திலும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
கடலூர் கிழக்கு மாவட்ட கட்சியின் செயலாளரும், மாவட்ட கவுன்சிலருமான சான். முத்துக்கிருஷ்ணன் தலைமை வகித்தார். முகாமை பாரம்பரிய பாதுகாப்பு குழு தலைவர் டாக்டர் கோவிந்தசாமி துவக்கி வைத்தார்.
மாவட்ட தலைவர் தட்சிணாமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டன.
தொடர்ந்து மரக்கன்றுகள் நடப்பட்டன. பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதேபோல் கடலூர் தெற்கு மாவட்ட பாமக சார்பில் சிதம்பரம் காந்தி சிலை அருகே சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
கடலூர் தெற்கு மாவட்ட செயலாளர் செல்வ மகேஷ் முன்னிலை வகித்தார். மாநில வன்னியர் சங்க தலைவர் புதா. அருள்மொழி, நிர்வாகிகள் தேவதாஸ் படையாண்டவர், சஞ்சீவி, முன்னாள் நகர தலைவர் அருள், பசுமை தாயகம் மாநில துணை தலைவர் அழகரசன் உட்பட பாமக, வன்னியர் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
மருத்துவர் அன்புச் சோழன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் பொதுமக்களுக்கு பொது மருத்துவம் மற்றும் பல் பரிசோதனை செய்து மருந்து, மாத்திரைகள் வழங்கினர்.
முன்னதாக சிதம்பரம் காந்தி சிலை பகுதியில் பாமகவினர் கொடி ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். நடராஜர் கோயிலில் சிறப்பு ஊர்வலமும் செய்யப்பட்டது.