ஐதராபாத்: ஹரியானா சட்டசபை தேர்தலில் 3-வது முறையாக வெற்றி பெற்றுள்ள பா.ஜ.க.,வுக்கு ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதை தனது X தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “ஹரியானா மற்றும் ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றத் தேர்தல்களில் பா.ஜ.க.வின் சிறப்பான செயல்பாடு, பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குத் தலைமை, அனைவரையும் உள்ளடக்கிய அரசியல், மக்கள் நலனில் கவனம் செலுத்துதல் மற்றும் மக்கள் மத்தியில் அவருக்கு இருக்கும் ஆதரவு ஆகியவற்றைக் காட்டுகிறது.
ஹரியானாவில் வரலாற்று சிறப்புமிக்க ஹாட்ரிக் வெற்றிக்கும், காஷ்மீரில் குறிப்பிடத்தக்க வெற்றிக்கும் என்.டி.ஏ., பிரதமர் மோடி, பா.ஜ.க., தலைமை மற்றும் கட்சித் தொண்டர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று (அக்.08) நடைபெற்றது. இதில், ஹரியானாவில் தனிப்பெரும்பான்மை பெற்றுள்ள பா.ஜ.க., தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சி அமைக்கிறது.
நயாப் சிங் சைனி மீண்டும் முதல்வராக பதவியேற்பார் என தெரிகிறது. அதேபோல் ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டு – காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை பிடித்துள்ளது. முதலமைச்சராக உமர் அப்துல்லா பதவியேற்கவுள்ளார்.