சென்னை: குறட்டையால் அவதிப்படுகிறீர்களா. எளிமையான முறையில் உங்களுக்கான தீர்வு.
குறட்டை சுவாசப் பாதையிலுள்ள மென் திசுக்கள் வீக்கமுற்று அந்த வழியே காற்று உள்ளே செல்லும் போது அதிர்ந்து குறட்டை வருகிறது.இப்பொழுது குறட்டை சத்தத்தை குறைத்து குறட்டையில் இருந்து விடுபட இந்த இயற்கை முறையையே பயன்படுத்துங்கள்.
இன்றைய காலகட்டத்தில் குறட்டை பிரச்சனை பெரும் பிரச்சனை. குறட்டை விடுவதால் அவர்களுக்கு பிரச்சினை இல்லாமல் அவரை சுற்றி உள்ளவர்களுக்கும் பிரச்சனை ஏற்படுகிறது. ஒரு சிலருக்கு குறட்டை எப்படி வருகிறது என்று சந்தேகமாக இருக்கும். உடல் பருமனாக உள்ளவர்கள், தைராய்டு உள்ளவர்கள், மூச்சுப்பாதை பிரச்சினை உள்ளவர்கள் ஆகியோருக்கு குறட்டை பிரச்சனை வரும்.
அதேபோல் மது அருந்துவதாலும் குறட்டை வரும். இதை சரி செய்ய கூடிய 20 நாட்களில் உங்களது குறட்டை சத்தம் குறைய நல்ல தீர்வாக இந்த பதிவு அமையப் போகிறது.
தேவையான பொருட்கள்:
அதிமதுரப் பொடி
வெண் கடுகு பொடி
தேன்
பனங்கற்கண்டு.
செய்முறை: ஒரு பௌலை எடுத்துக் கொள்ளவும். அதில் அதிமதுர பொடி 2 சிட்டிகை எடுத்து கொள்ளவும். பின் வெண் மிளகு பொடி ஒரு சிட்டிகை எடுத்து கொள்ளவும். இரண்டு ஸ்பூன் அளவுக்கு தேன் ஊற்றி கலந்து கொள்ளவும்.
பின் அதில் பனங்கற்கண்டு சேர்த்து நன்றாக கால் டீஸ்பூன் வரும் அளவிற்கு லேகியம் போல தயார் செய்து கொள்ளவும். இதனை இரவு படுக்கும் முன் இரவு சாப்பாட்டை முடித்து விட்டு இதை கால் டீஸ்பூன் அளவிற்கு சாப்பிட்டு 5 நிமிடம் கழித்து சுடுதண்ணீர் குடித்துவர 20 நாட்களில் குறட்டை சத்தம் குறையும்.