புதுடெல்லி: கல்வியில் உலகின் சிறந்த பல்கலைக்கழகங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. டைம்ஸ் ஹையர் எஜுகேஷன் மூலம் கல்வி மற்றும் ஆராய்ச்சியில் உள்ள சிறந்த பல்கலைக்கழகங்கள் குறித்து ஒரு ஆய்வு நடத்தப்பட்டது.
115 நாடுகளில் உள்ள 2000க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களில் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில், இங்கிலாந்தைச் சேர்ந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் 9வது ஆண்டாக முதல் இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு 2வது இடத்தில் இருந்த ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் 6வது இடத்திற்கு தள்ளப்பட்டது.
அமெரிக்காவைச் சேர்ந்த எம்.ஐ.டி., எனப்படும் மசாசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகம், இந்த ஆண்டு 2வது இடத்தைப் பிடித்துள்ளது. அதேபோல் கடந்த முறை 4வது இடத்தில் இருந்த ஹார்வர்டு பல்கலைக்கழகம் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் 4வது இடத்தில் உள்ளது.
கண்ணுகெட்டிய தூரம் வரை இந்தப் பட்டியலில் இந்தியப் பல்கலைக்கழகங்கள் எதுவும் இல்லை. பெங்களூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் 261வது இடத்தில் உள்ளது.