சென்னை: ம.தி.மு.க., பொதுச் செயலர் துரை வைகோ நேற்று வெளியிட்ட அறிக்கை:-
ராகுல் காந்தியை நேற்று (9-ம் தேதி) மதியம் 12 மணிக்கு டெல்லி ஜென்பத் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தேன். அரியானா மற்றும் காஷ்மீர் சட்டசபை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து, ராகுலை சந்திக்க காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் காத்திருந்தனர்.
இருப்பினும் எனக்கு நேரம் ஒதுக்கி அன்புடன் வரவேற்று ம.தி.மு.க தலைவர் வைகோவை ஆர்வமுடன் நலம் விசாரித்தார். காஷ்மீரில் வெற்றியின் பலனை அறுவடை செய்ததற்காக முதலில் அவரை வாழ்த்தினேன்.
திராவிட இயக்கத்தின் அரசியல் சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்டதால்தான் தமிழர்கள் வித்தியாசமான மனநிலையில் உள்ளனர், அதனால்தான் மதச்சார்பின்மை கொள்கை அங்கு வெற்றி பெற்றுள்ளது என்று ராகுல் காந்தி கூறியபோது நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.
அப்போது எனது மகளின் திருமண அழைப்பிதழை அவரிடம் கொடுத்தபோது, எங்கள் குடும்பம், மகன், மகள் பற்றி மகிழ்ச்சியுடன் கேட்டார். அதேபோல் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை டெல்லியில் நேற்று மாலை சந்தித்து திருமண அழைப்பிதழ் கொடுத்தேன். வைகோவின் உடல்நலம் குறித்து விசாரித்தார்.
மேலும் எனது குடும்பம் மற்றும் மணமகள் குறித்து கேட்டறிந்து திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்தார். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.