ஐரோப்பிய நாடான ஸ்டாக்ஹோம் நகரைச் சேர்ந்த பிரபல விஞ்ஞானி ஆல்பிரட் நோபலின் நினைவாக பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு துறைக்கான அறிவிப்பு கடந்த 7ம் தேதி துவங்கியது.
இலக்கியத்துக்கான நோபல் பரிசு தென் கொரிய எழுத்தாளர் ஹான் காங்கிற்கு (53) நேற்று அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் நோபல் பரிசை வென்ற தென் கொரியாவின் முதல் எழுத்தாளர் என்ற பெருமையை பெற்றார். 1993ல் தனது கவிதைகளை வெளியிட்டு இலக்கியத்துறையில் நுழைந்தார்.இவரது ‘வெஜிடேரியன்’ நாவல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பரவலான வரவேற்பைப் பெற்றது.
ஹான் கேங்க் இந்த நாவலுக்காக 2016 இல் சிறந்த புத்தகத்திற்கான புக்கர் சர்வதேச பரிசை வென்றார். உடல் மற்றும் ஆன்மா, பிறப்பு மற்றும் இறப்பு ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்புகள் பற்றிய தனித்துவமான விழிப்புணர்வை அவரது இலக்கியப் பணி கொண்டுள்ளது என்று நோபல் கமிட்டியின் அறிக்கை கூறுகிறது.