வியன்டியேன்: தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு ‘ஆசியான்’ என்று அழைக்கப்படுகிறது. இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தியா, வியட்நாம், லாவோஸ், கம்போடியா மற்றும் புருனே ஆகிய நாடுகள் இந்த அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளன.
இதேபோல், கிழக்கு ஆசிய அமைப்பில் ஆஸ்திரேலியா, சீனா, இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட 10 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த 2 அமைப்புகளின் உச்சி மாநாடு லாவோஸ் தலைமையில் அந்நாட்டின் தலைநகர் வியன்டியானில் நடைபெறுகிறது.
இதில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு லாவோஸ் பிரதமர் சோனெக்ஸ் சிபாண்டோன் அழைப்பு விடுத்தார். இதை ஏற்று பிரதமர் மோடி 2 நாள் பயணமாக லாவோஸ் சென்றார்.
லாவோஸ் புறப்படும் முன் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, “கிழக்காசியக் கொள்கை உருவாக்கப்பட்டு 10 ஆண்டுகள் ஆகிறது. இதன் மூலம் நமது நாடு கணிசமான பலன்களைப் பெற்றுள்ளது. எதிர்காலத்தில் முழு ஒத்துழைப்புடன் செயல்படுவது குறித்து ஆசியான் தலைவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளேன்.
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழுமைக்கான சவால்களைப் பற்றி விவாதிக்க கிழக்கு ஆசிய மாநாடு ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது, இது லாவோஸுடன் இருதரப்பு உறவுகளைப் பகிர்ந்து கொள்கிறது இந்த கூட்டத்தில் லாவோஸ் தலைவர்கள், பல நாடுகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளேன்.
இந்நிலையில், லாவோஸ் சென்றடைந்த பிரதமர் மோடியை, தலைநகர் வியன்டியானில் அந்நாட்டு உள்துறை அமைச்சர் விலய்வோங் பெலதாகம் வரவேற்றார்.
பௌத்தர்கள் மூலம் இந்தியாவிலிருந்து லாவோஸுக்கு வந்த இராமாயணம், அங்கு ‘பாலக் பாலம்’ அல்லது ‘பிர லக்பிர ராம்’ என்று அழைக்கப்படுகிறது. இது இரு நாடுகளுக்கும் இடையே உள்ள கலாச்சார உறவை பிரதிபலிக்கிறது.
இந்நிலையில் லாவோஸ் சென்ற பிரதமர் மோடி அந்நாட்டு ராமாயணத்தை பார்வையிட்டார். அங்குள்ள ராயல் தியேட்டர் குழுவினர் பிரதமர் மோடிக்கு ராமாயணம் நடித்து காட்டினர்.