அவிநாசி: திருப்பூர் மாநகராட்சியை ஒட்டியுள்ள பல்வேறு ஊராட்சிகளை திருப்பூர் மாநகராட்சியுடன் இணைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், அவினாசி ஒன்றியத்துக்கு உட்பட்ட பழங்கரை ஊராட்சியை, திருப்பூர் மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து, அனைத்துக் கட்சியினர் இன்று, அனைத்து ஊராட்சிகளின் வீடுகளிலும் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர்.
அதன்படி இன்று பழங்கரை ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து வீடுகளிலும் கருப்பு கொடி ஏற்றப்பட்டது.
மேலும், வணிக வளாகங்கள், டீக்கடைகள், பனியன் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட இடங்களில் கருப்புக் கொடி கட்டியும், அடைத்தும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.