2014 கத்தி படத்தில் தொடங்கி இன்று வரை வேட்டையன் வரை, லைக்கா 20க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்துள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக, அந்த நிறுவனத்திற்கு கெட்ட நேரம் பிடித்தது போல, பல விஷயங்களில் மாட்டிக்கொண்டிருந்தனர்.
அமலாக்கத்துறை நிறுவனத்தின் கணக்குகளை கேட்டு ரைடு செய்ததன் மூலம், லைக்கா நிதி நெருக்கடியிலும் மாட்டிக்கொண்டது. பெரிய ப்ராஜெக்ட்கள் கைவசம் இருந்ததால், எதிலயும் கவனம் செலுத்த முடியாமல் திணறி வந்தனர்.
சந்திரமுகி 2, லால் சலம், இந்தியன் 2 போன்ற பெரிய படங்கள், அவர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியது. இதனால், அவர்களுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டது, மேலும் பல ப்ராஜெக்ட்களில் இருந்து வெளியே வந்தனர். தற்போது கைவசம் இருக்கும் படத்தை மட்டுமே தயாரித்து வந்தனர்.
வேட்டையன் மற்றும் விடாமுயற்சி போன்ற பெரிய ப்ராஜெக்டுகளை கையில் எடுத்ததால், எல்லாமே பட்ஜெட் அதிகமாக இருந்தது, அதனால் நிதி இல்லாமல் வெளிநாட்டு சூட்டிங் மற்றும் பாடல் காட்சிகளை ஒதுக்கி வந்தனர். இந்தியன் 2 படத்தால் பெரிதும் நஷ்டம் ஏற்பட்டது.
இப்போது, வேட்டையன் படம் ரிலீசாகி உள்ளது. இந்த படம் லைக்கா நிறுவனத்திற்கு நல்ல வசூலை பெற்றுத் தந்துள்ளது. 200 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்த படம், லைக்காவின் அனைத்து கஷ்டங்களை போக்கியுள்ளது. இன்று வரை 140 கோடிகளை வசூலித்துள்ளது.
மேலும் டிஜிட்டல் மற்றும் சேட்டிலைட் விவரங்களில் நல்ல விலைக்கு விற்கப்பட்டுள்ளது. தற்போது விடா முயற்சி படத்திற்கு ரூட் கிளியர் ஆகிவிட்டது, இது லைக்காவின் மீண்டுபரியமிக்க வாய்ப்பு ஆக இருக்கின்றது.