கடலூர்: வடகிழக்கு பருவமழை மீட்பு பணிகளுக்காக மாநில மீட்பு குழுவினர் இன்று கடலூர் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளனர். வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 25 மாநில பேரிடர் மீட்புப் படை வீரர்கள் இன்று காலை கடலூர் மாவட்டத்திற்கு வந்தனர்.
பேரிடர் மீட்புக்கான அனைத்து உபகரணங்களுடன் வந்துள்ளனர். இக்குழுவினர் கடலூர் தேவனாம்பட்டினத்தில் உள்ள ஈக்விடாஸ் குருகுல பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் சென்னை ஆவடியை சேர்ந்தவர்கள். மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி மீட்புப் பணி தேவைப்படும் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர். இது குறித்து, மாநில பேரிடர் மீட்பு குழுவை சேர்ந்த அஜய்குமார் கூறுகையில், மூன்று குழுவாக பிரிக்கப்பட்டு, கடலூருக்கு ஒரு குழுவும், விழுப்புரத்திற்கு ஒரு குழுவும், சீர்காழிக்கு ஒரு குழுவும் அனுப்பப்பட்டுள்ளன.
கனமழையால் ஏற்படும் பேரிடர்களில் இருந்து பொதுமக்களை மீட்க அனைத்து உபகரணங்களுடன் தயாராக உள்ளோம்,” என்றார்.