கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளதால், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து 1700 கன அடியில் இருந்து 3,436 கன அடியாக அதிகரித்துள்ளது.
52 அடி உயரம் கே.ஆர்.பி. அணையில் 50.40 அடி நீர் இருப்பு உள்ளது. கேஆர்பி அணை முழு கொள்ளளவை நெருங்கி வினாடிக்கு 2,680 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
கே.ஆர்.பி., அணைக்கு எதிரே உள்ள தரைப்பாலத்தில் தண்ணீர் செல்வதால், சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.