கொல்கத்தா: கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மூத்த மருத்துவர் கொல்லப்பட்டதற்கு நீதி கோரி கொல்கத்தா மருத்துவர்களின் வேலைநிறுத்தம் 13-வது நாளை எட்டியுள்ளது.
உயிரிழந்த மருத்துவருக்கு நீதி வழங்க வேண்டும், மாநில சுகாதாரத்துறை செயலரை மாற்ற வேண்டும், மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கு போதிய வசதி செய்து தர வேண்டும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட 10 கோரிக்கைகளை முன்வைத்து பயிற்சி மருத்துவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பயிற்சி மருத்துவர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக ஆர்.ஜி.கர் மருத்துவமனையின் மூத்த மருத்துவர்கள் 50 பேர் கடந்த 8-ம் தேதி ராஜினாமா செய்தனர். கொல்கத்தாவின் மையப்பகுதியில் நடைபெற்று வரும் உண்ணாவிரதப் போராட்டத்திலும் அவர்கள் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில் நேற்று 6 பேரின் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.