அவிநாசி: நல்லாறு ஓடை சீனிவாசபுரத்தில் இருந்து பழைய பேருந்து நிலையம் மற்றும் அவினாசி லிங்கேஸ்வரர் கோயில் அருகே புதிய பேருந்து நிலையம் பின்புறம் செல்கிறது.
இதில் விஷச்செடிகள், களைகள், புற்கள், புதர்கள் மற்றும் அவ்வப்போது, மழையால் அடித்துச் செல்லப்படும் கழிவுகள் நீர்நிலைகளில் தேங்கி நிற்கிறது. பல மாதங்களாகியும் அகற்றப்படவில்லை. இதனால், கழிவுநீர் மற்றும் மழைநீர் தேங்கி நின்றது. அவினாசியில் உள்ள மழைநீர் வடிகால் மற்றும் நீர்நிலைகளை சுத்தம் செய்து தூர்வாரும் பணியை நகராட்சி நிர்வாகம் தீவிரமாக மேற்கொண்டது.
சீனிவாசபுரத்தில் இருந்து பழைய பேருந்து நிலையம் மற்றும் நல்லாறு ஓடை பின்புறம் உள்ள புதிய பேருந்து நிலையம் வரை பொக்லைன் இயந்திரம் மூலம் இரண்டு கி.மீ தூரம் வரை தோண்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இப்பணிகள் பேரூராட்சி தலைவர் தனலட்சுமி, செயல் அலுவலர் சண்முகம், சுகாதார ஆய்வாளர் கருப்புசாமி ஆகியோர் மேற்பார்வையில் நடைபெற்று வருகிறது.