திருவள்ளூர்: உலக அயோடின் குறைபாடு தடுப்பு தினம் ஆண்டுதோறும் அக்டோபர் 21-ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. மனித வளர்ச்சிக்கும் மூளை வளர்ச்சிக்கும் அயோடின் இன்றியமையாத நுண்ணூட்டச் சத்து. தைராய்டு குறைபாடு, மனநோய் – மனநல குறைபாடு, இயல்புக்கு மாறான நோய், மூளை பாதிப்பு, குழந்தைகளில் அறிவாற்றல் குறைபாடு, காது கேளாமை மற்றும் கர்ப்பிணிப் பெண்களில் தன்னிச்சையான கருக்கலைப்பு, செவிப்புலன், பார்வை மற்றும் பேச்சு குறைபாடுகள்.
அயோடின் போதுமான அளவு உட்கொள்வதைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவும், அயோடின் குறைபாட்டின் விளைவுகளை முன்னிலைப்படுத்தவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
அதன்படி, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உலக அயோடின் குறைபாடு மற்றும் நோய் தடுப்பு தினத்தையொட்டி, அயோடின் பயன்பாடு குறித்த நடைமுறை விளக்கம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை சார்பில் நடைபெற்ற கண்காட்சியை ஆட்சியர் த.பிரபுசங்கர் பார்வையிட்டார்.
இதில், அயோடின் கலந்த உப்பு மற்றும் அயோடின் கலந்த உப்பு குறித்த செயல் விளக்கம் குறித்து பொதுமக்களுக்கு விளக்கப்பட்டது. பின்னர், அனைத்து உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மூலம் பல்வேறு பள்ளிகளில் உலக அயோடின் குறைபாடு மற்றும் நோய் தடுப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் உலக அயோடின் குறைபாடு மற்றும் நோய் தடுப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட நியமன அலுவலர் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ஜெகதீஷ் சந்திரபோஸ், வட்டார சுகாதார அலுவலர் பிரியராஜ், மாவட்ட வழங்கல் அலுவலர் கண்ணன் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.