புதுச்சேரி: நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்தின் மாநிலச் செயலாளராக இருப்பவர் சரவணன் (47).
இவர் புதுச்சேரி சித்தங்குடியை சேர்ந்தவர். இவருக்கு தேவி என்ற மனைவியும், மகனும் உள்ளனர். கல்லூரி நாட்களில் இருந்தே நடிகர் விஜய்யின் தீவிர ரசிகரான சரவணன் ரசிகர் மன்ற முன்னோடியாக இருந்து வருகிறார். தற்போது நடிகர் விஜய் கட்சி தொடங்கியுள்ள நிலையில், அதன் புதிய மாநில செயலாளராகவும், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு மிக நெருக்கமானவராகவும் உள்ளார்.
வரும் 27-ம் தேதி விக்கிரவாண்டியில் தமிழ்நாடு வெற்றி கழகம் சார்பில் நடக்கும் மாநாட்டு பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். பல நாட்களாக விக்கிரவாண்டியில் தங்கி மாநாட்டு பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், புதுச்சேரி திரும்பிய அவருக்கு இன்று மாலை வீட்டில் இருந்தபோது லேசான நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால், குடும்பத்தினர் அவரை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அதன்பின், சரவணனின் உடல் புதுச்சேரி சித்தன்குடியில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றி கழகத்தின் புதுச்சேரி மாநிலச் செயலாளர் மாரடைப்பால் காலமானதால் அவரது கட்சி ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.