தங்கவயல்: தங்கவயல் நீதிமன்றத்தில் டிச.14ல் தேசிய லோக் அதாலத் நடக்கிறது.நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு சமரசம் மூலம் தீர்வு காணப்படும் என தலைமை நீதிபதி முசாபர் ஏ.மஞ்சரி தெரிவித்தார்.
தங்கவயல் நீதிமன்றத்தில் 2,500க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவற்றை சுமுகமாக தீர்க்க டிசம்பர் 14ம் தேதி தேசிய லோக் அதாலத் நடத்தப்படும். வரதட்சணை, விவாகரத்து, வங்கிகளில் பண தகராறு, மோட்டார் வாகன விபத்து தகராறு, குடிநீர் மற்றும் மின்கட்டண தகராறு போன்ற சிவில் வழக்குகளில், இரு தரப்பினரும் சமரசம் செய்து கொள்ளலாம்.
இரு தரப்புக்கும் வழக்கறிஞர்கள் மூலம் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு கிடைத்துள்ளது. இதற்கு, வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுக்கு விழிப்புணர்வு தேவை, என்றார். நீதிபதிகள் ரஹீம் அலி மவுலானா, வினோத்குமார், மஞ்சு, வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ராஜகோபால கவுடா, துணைத் தலைவர் மணிவண்ணன், பொதுச் செயலர் நாகராஜ், மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.