வாஷிங்டன்: இந்தியன் சத்யா நாதெல்லா 2014-ம் ஆண்டு முதல் மைக்ரோசாப்டின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்து வருகிறார். ஜூலை 19 அன்று, மைக்ரோசாஃப்ட் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் பல வணிகங்கள் மற்றும் தனிப்பட்ட பயனர்கள் தங்கள் சாதனங்களில் ப்ளூ ஸ்கிரீன் ஆஃப் டெத் சிக்கலை எதிர்கொண்டனர்.
பாதுகாப்பு சவால்கள் இருந்தபோதிலும், தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லாவின் 2024-ம் ஆண்டுக்கான ஊதிய தொகுப்பு ரூ.665.15 கோடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 63 சதவீதம் அதிகமாகும். பணியில் சேர்ந்த பிறகு அவர் பெற்ற அதிகபட்ச சம்பள உயர்வு இதுவாகும்.