டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி நாளை குஜராத் செல்கிறார். வதோதராவில் உள்ள டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் (டிஏஎஸ்எல்) வளாகத்தை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் ஆகியோர் திறந்து வைத்தனர்.
ராணுவத்துக்கு தேவையான சி-295 விமானம் இந்த வளாகத்தில் தயாரிக்கப்பட உள்ளது. இந்தியாவின் ராணுவ தளவாட உற்பத்தியில் இது ஒரு பெரிய மைல்கல். இந்த ஆலைக்கு 2022 அக்டோபரில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்திய ராணுவத்திற்காக மொத்தம் 56 சி-295 விமானங்களை வாங்க ஏர்பஸ் நிறுவனத்துடன் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. இதில் 16 விமானங்கள் ஸ்பெயினில் தயாரிக்கப்பட்டு இந்தியாவுக்கு வழங்கப்படும்.
மீதமுள்ள 40 விமானங்கள் டிஏஎஸ்எல் நிறுவனத்தால் தயாரிக்கப்படும். ராணுவ விமானம் தயாரிக்கும் முதல் தனியார் வசதி இதுவாகும். டாடா மட்டுமின்றி பாரத் எலக்ட்ரானிக்ஸ், பாரத் டைனமிக்ஸ் போன்ற பொதுத்துறை நிறுவனங்களும் சில மைக்ரோ, சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களும் இந்த விமான தயாரிப்பு திட்டத்தில் பங்களிக்கவுள்ளன.
பின்னர் பிரதமர் மோடி வதோதராவில் உள்ள லட்சுமி விலாஸ் அரண்மனைக்கு செல்கிறார். அங்கிருந்து மதியம் 2.45 மணிக்கு அம்ரேலி செல்லும் பிரதமர் மோடி, பாரத் மாதா சரோவர் அணையை திறந்து வைக்கிறார். இதுதவிர அங்கு நடைபெறும் பொது நிகழ்ச்சியில் ரூ.4,800 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை தொடங்கி வைப்பதுடன், சில திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.