வாஷிங்டன்: நடப்பு ஆண்டில் ரூ.665 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 63% அதிகமாகும். இதில் பெரும்பகுதி பங்குகளாக வெளியிடப்படுகிறது.
கடந்த ஜூலை மாதம், மைக் ரோசாஃப்டின் மென்பொருள் ‘புளூ ஸ்கிரீன் ஆஃப் டெத்’ சைபர் பாதுகாப்பு சிக்கலை சந்தித்தது. இதனால் உலகம் முழுவதும் மைக்ரோசாப்ட் தளங்கள் முடங்கின. இந்த பிரச்சினையால் சத்யா நாதெல்லா தனது சம்பளத்தை குறைக்க கோரியிருந்தார். ஆனால், கடந்த ஆண்டை விட கூடுதலாக சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சத்யா நாதெல்லா , 2014-ல் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அதன் பின் அந்நிறுவனத்தில் பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டார். AI மேம்பாட்டில் அவர் செய்த பெரும் முன்னேற்றங்கள் மற்றும் 2022-ம் ஆண்டில் ஆக்டிவிஷன் ப்ளிஷார்டை நிறுவனம் $68 பில்லியன் கையகப்படுத்தியதன் காரணமாக அவரது ஊதிய உயர்வு ஏற்பட்டதாக நிறுவனம் கூறியது.