வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பை (எமர்ஜிங் ஆசிய கோப்பை) டி20 கிரிக்கெட் தொடர் ஓமனில் நடைபெற்றது. 8 அணிகள் பங்கேற்ற இந்தத் தொடரில் ஏ பிரிவில் இலங்கை ஏ, ஆப்கானிஸ்தான் ஏ அணிகளும், பி பிரிவில் இந்தியா ஏ, பாகிஸ்தான் ஏ அணிகளும் அரையிறுதிக்குத் தகுதி பெற்றன. ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன், வங்கதேசம், ஹாங்காங் ஆகிய அணிகள் தொடரில் இருந்து பரிதாபமாக வெளியேறின.
அரையிறுதியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அதேபோல், இந்திய அணியை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இரு அணிகளுக்கும் இடையிலான இறுதிப் போட்டி நேற்று அல் அமெராமில் நடைபெற்றது.
இதில், டாஸ் வென்று முதலில் பேட் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 133 ரன்கள் எடுத்தது. சஹான் அரசிகே அதிகபட்சமாக 64 ஓட்டங்களைப் பெற்றார். 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 18.1 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்தது.
இதன் மூலம் இலங்கையை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, வளர்ந்து வரும் ஆசிய கோப்பையையும் ஆப்கானிஸ்தான் வென்றது.