சென்னை: அனைத்து தரப்பு மக்களின் வாழ்வையும் வளமாக்கும், இந்துக்களின் மத நம்பிக்கையை வலுப்படுத்தும் நமது தீபாவளி பண்டிகை என இந்து முன்னணி அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தீபாவளி வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தீபாவளி திருநாளில் இறைவன் சகல சௌபாக்கியங்களையும் வளத்தையும் அளிக்க இறைவனை பிரார்த்திக்கிறோம். சுமார் 300 வகையான தொழில்களில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்களின் குடும்பங்களை வளப்படுத்தும் மாபெரும் பண்டிகை தீபாவளி.
விவசாயத்திற்கு அடுத்தபடியாக, ஜவுளித் தொழிலுக்கு தீபாவளி முக்கியமான பண்டிகை. சிவகாசி போன்ற வறண்ட பகுதிகளில் உள்ள மக்களின் உழைப்பில் உற்பத்தி செய்யப்படும் பட்டாசுகள் குழந்தைகளுக்கு மட்டுமின்றி சிவகாசி பகுதியில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமாகவும் உள்ளது. இந்த பண்டிகையை பல வழிகளில் சீர்குலைக்க பல வெளிநாட்டு சக்திகள் சதி செய்தாலும், நமது நம்பிக்கையின் மூலம் அவற்றை முறியடித்து வெற்றி பெற்றுள்ளோம்.
அதுவே இந்து தர்மத்தின் வெற்றி. அனைத்து தரப்பு மக்களின் வாழ்க்கையையும் வளப்படுத்தி, நமது தீபாவளி பண்டிகை இந்துக்களின் மத நம்பிக்கையை வலுப்படுத்துகிறது. இந்து முன்னணி சார்பில் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்,” என்றார்.