நடிகர்கள் தங்கள் முகத் தோற்றத்தை மாற்ற பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்வது வழக்கம். ஸ்ரீதேவி முதல் ஸ்ருதிஹாசன் வரை பல நடிகைகள் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டதாக கூறப்படுகிறது. புருவங்களை அழகுபடுத்துவதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் நயன்தாரா, கன்னம் மற்றும் மூக்கில் அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகவும், உதட்டில் ‘லிப் ஃபில்லர்’ பயன்படுத்துவதாகவும் செய்திகள் வெளியாகின.
இதற்கு நயன்தாரா மறுப்பு தெரிவித்தார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், “நான் புருவங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது உண்மைதான். அதை அலங்கரிக்க அதிக நேரம் எடுத்துக் கொள்கிறேன். ஏனென்றால் அது எனக்கு உண்மையான ‘கேம் சேஞ்சர்’. வித்தியாசம் காரணமாக என் முகத்தில் மாற்றம் செய்திருக்கிறேன் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.
ஆனால், அது உண்மையல்ல. நான் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்யவில்லை. உணவின் காரணமாக உடல் எடையில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படுகின்றன. அதனால் என் கன்னங்கள் ஒட்டி இருப்பது போலவும், தடித்து இருப்பது போலவும் தெரிகிறது. அவ்வளவுதான் வேற ஒண்ணும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.