பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி, அரவிந்த் சுவாமி, ராஜ்கிரண், ஸ்ரீதிவ்யா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்தை 2டி நிறுவனம் தயாரித்து வெளியிட்டது, கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், இப்போது ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டு கொண்டாடப்படுகிறது.
‘மெய்யழகன்’ படத்தின் வசூல் நிலவரம் குறித்து இணையத்தில் பல்வேறு கருத்துகள் உலா வருகின்றன. ஆனால், இதுகுறித்து படக்குழுவினர் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. தற்போது ‘மெய்யழகன்’ படத்தின் வெற்றி மற்றும் வசூல் நிலவரம் குறித்து சூர்யா ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அதில், “மெய்யழகன்‘ படத்தை தயாரித்ததில் பெருமை அடைகிறேன்.
படத்தின் வசூல் பற்றி சொல்லவே தேவையில்லை என்று நினைக்கிறேன். படம் 25% வரை வசூல் செய்தது. 10% லாபத்தில் நான் தயாரித்த படம். எனக்கு 25% லாபம் கொடுத்தது ஒரு படம் எவ்வளவு லாபம் என்று தயாரிப்பாளருக்கு மட்டுமே தெரியும். ‘மெய்யழகன்’ திரைப்படம் சமகால இலக்கியம்.
இன்று மக்கள் எப்படி வாழ்கிறார்கள், அவர்களின் மதிப்புகள், கலாச்சாரம், வாழ்க்கை முறை மற்றும் நெறிமுறைகள் பற்றி பேசும் படம் இது. சமீபகாலமாக வந்த படங்களில் இதையெல்லாம் பேசிய ஒரே படம் ‘மெய்யழகன்’. அதனால்தான் இதை மிக முக்கியமான படமாக பார்க்கிறேன். எனவே படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் பற்றி கவலைப்பட வேண்டாம்” என்று சூர்யா கூறியுள்ளார்.