சென்னையில் இன்றைய (அக்.30ஆம் தேதி) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை தெரிந்து கொள்ளலாம். அக்டோபர் மாத தொடக்கம் முதலே ஆபரணத்தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.
சென்னையில் நேற்று (அக்.29ஆம் தேதி) ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ரூ.7,375க்கும், சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.59,000க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று (அக்.30ஆம் தேதி) ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.59,520க்கும், கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.7,440க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 18 காரட் ஆபரணத்தங்கத்தின் விலையும் சவரனுக்கு ரூ.440 உயர்ந்து ரூ.49,040க்கும், கிராமுக்கு ரூ.55 உயர்ந்து ரூ.6,130க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல் வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.109க்கும், ஒரு கிலோ ரூ.1,09,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.