புதுடெல்லி: தீபாவளி கொண்டாட்டத்தை முன்னிட்டு, தேசிய தலைநகரில் இன்று காற்று மாசு அளவு கணிசமாக அதிகரித்துள்ளது. எட்டு கண்காணிப்பு நிலையங்களில் காற்றின் தரம் மிகவும் மோசமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு இன்றுகாலை 9 மணியளவில் 278 ஆக இருந்தது. முந்தைய நாளில் இது 268 ஆக இருந்தது. இருப்பினும், நகரின் ஒட்டுமொத்த காற்றின் தரம் தொடர்ந்து மோசமாகவே இருந்தது. சில நாட்களாக மோசமான நிலையில் இருந்த காற்றின் தரம், நேற்று பலத்த காற்று வீசியதால் சற்று முன்னேற்றம் கண்டது.
திங்கள்கிழமை காற்றின் தரம் 304 ஆகவும், ஞாயிற்றுக்கிழமை 359 ஆகவும் இருந்தது. மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் கூற்றுப்படி, 36 கண்காணிப்பு மையங்களில், ஆனந்த் விஹார், அசோக் விஹார், அயா நகர், பவானா, ஜஹாங்கிர்புரி, முந்த்கா, விவேக் விஹார் மற்றும் வஷிர்புர் ஆகிய எட்டு இடங்களில் காற்றின் தரம் மிகவும் மோசமாக இருந்தது. இதற்கிடையில், வெப்பநிலை இன்னும் குறையவில்லை.
டெல்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது, அதன் வழக்கமான வெப்பநிலையை விட 4.9. காலை 8 மணியளவில் ஈரப்பதம் 83 சதவீதமாக இருந்தது.