சென்னை: சென்னையில் தீபாவளி பண்டிகையை மக்கள் கொண்டாடி வரும் நிலையில் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டு வருகிறது. 15 மண்டலங்களிலும் பட்டாசு கழிவுகள் இரவு பகலாக அகற்றப்படுகிறது.
இப்பணியில் மொத்தம் 19,060 பேர் ஈடுபட்டுள்ளனர். பட்டாசு கழிவுகள் ஆபத்தானவை என்பதால், தனித்தனியாக சேகரிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்படுகிறது. இவ்வாறு சேகரிக்கப்படும் குப்பைகள் குமிடிப்பூண்டி சிப்காட் தொழிற்சாலை வளாகத்தில் உள்ள அபாயகரமான கழிவுகளை சேகரித்து அகற்றுவதற்காக 33 தனி வாகனங்கள் மூலம் தமிழ்நாடு கழிவு மேலாண்மை நிலையத்திற்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்படுகிறது. இன்று 4 நாட்களில் செய்த அதே வேலை ஒரே நாளில் செய்யப்படுகிறது.
இந்நிலையில், சென்னையில் 2 நாட்களில் 156.48 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னையில் நேற்று முதல் இன்று மதியம் 12 மணி வரை 156 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன.
சென்னை தெருக்களில் குவிந்துள்ள குப்பைகளை அகற்றும் பணியில் துப்புரவு பணியாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். மேலும், பட்டாசு கழிவுகள் உள்ளிட்ட குப்பைகளை அகற்றும் பணியும் நடந்து வருகிறது. கடந்த தீபாவளியன்று 275 டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.