அமெரிக்கா: ரஷ்யாவுக்கு எதிரான போரை நடத்த உக்ரைனுக்கு அமெரிக்கா ஏவுகணைகள், பீரங்கிகள் போன்றவற்றை உதவியாக அளித்துள்ளது.
ரஷ்யாவுக்கு எதிரான போரை மேலும் தீவிரமாக நடத்தும் வகையில், உக்ரைனுக்கு ஏவுகணைகள், பீரங்கிகள் உள்பட, இந்திய ரூபாயில் 3,575 கோடி ரூபாய் மதிப்பிலான (425 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு) உதவிகள் வழங்கப்பட உள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
பென்டகன் வெளியிட்ட அறிவிப்பில், வான் தடுப்பு ஏவுகணைகள், ராக்கெட்டுகள், கவச வாகனங்கள், பீரங்கி எதிர்ப்பு தளவாடங்கள், டிரோன்களைத் தாக்கும் தளவாடங்கள், துப்பாக்கிகள், எதிரிப்படைகளைத் தாக்கி அழிக்கும் ஸ்டிரைக்கர் விமானங்கள் ஆகியவையும், மருத்துவ உதவி, போர்ப் பயிற்சி, போக்குவரத்து உதவி, ஆயுதப் பராமரிப்பு உள்ளிட்ட உதவிகள் வழங்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.