தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருந்த ரஜினி, சத்யராஜ், முரளி, விஜயகாந்த், கார்த்திக், பிரபுதேவா போன்ற நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார் ரோஜா. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் நடித்து பிரபலமானார் ரோஜா.
இயக்குனர் செல்வமணியை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகை ரோஜாவுக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். சினிமாவில் முன்ணனி நடிகையாக கலக்கிய ரோஜா தற்போது அரசியல் களத்தில் துணிவோடு செயல்பட்டு வருகிறார். விளையாட்டு துறை அமைச்சராக நடிகை ரோஜா பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வப்போது பண்டிகைகளை தனது இரண்டு குழந்தைகள் மற்றும் கணவருடன் கொண்டாடும் ரோஜாவின் புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் உலா வருவதுண்டு.
நடிகை ரோஜாவுக்கு அன்ஷுமல்லிகா என்ற மகளும், கிருஷ்ணா லோஹித் என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில், தனது செல்ல மகன் கிருஷ்ணாவின் பிறந்தநாளுக்கு நடிகை ரோஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகனுடன் இருக்கும் புகைப்படத்துடன் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், “பிறந்தநாள் வாழ்த்துக்கள் நன்னா, கடவுள் உன்னை ஆசிர்வதிக்கட்டும்” என்று பதிவிட்டுள்ளார். மகனுக்கு ரோஜா பதிவிட்ட பிறந்தநாள் வாழ்த்து தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.