அட்லாண்டா: அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்க உள்ள நிலையில் டிரம்ப்புடன் விவாதம் செய்ய ஜோ பைடன் திணறியதால் புதிய வேட்பாளரை அறிவிக்க ஜனநாயக கட்சி நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.
அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடனும், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்பும் போட்டியிடுகின்றனர்.
அட்லாண்டாவில் நடைபெற்ற தனியார் தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சியில் இருவரும் விவாதத்தில் ஈடுபட்டனர். பார்வையாளர்கள் இன்றி விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. முதலில் பேசிய டிரம்ப் ரஷ்யா-உக்ரைன் போர், இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் விவகாரத்தில் பைடன் மீது ஏராளமான விமர்சனங்களை முன்வைத்தார்.
மெக்சிகோவில் இருந்து அமெரிக்க எல்லைக்குள் நுழையும் அகதிகளால் நாட்டில் பிரச்னைகள் ஏற்படுகிறது. நான் அதிபராக இருந்த போது அமெரிக்க எல்லை மிகவும் பாதுகாப்பாக இருந்தது” என்றார்.
டிரம்பின் குற்றச்சாட்டை மறுத்த ஜோ பைடன், டிரம்ப் அளவுக்கு அதிகமாக பொய் பேசுகிறார். அவர் தேர்தலில் தோல்வி அடைவார்” என்றார். டிரம்ப் பேசுகையில் ”ஜோ பைடனை ஒரு கிரிமினல்” என்றார். ””ஜோ பைடன் டிரம்பை தண்டனை பெற்ற குற்றவாளி’ என கூறினார்.
இந்த விவாதம் தொடர்பாக அமெரிக்க வாக்காளர்களிடம் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 67 சதவீதத்தினர் விவாதத்தில் டிரம்ப் வெற்றி பெற்றதாக தெரிவித்துள்ளனர். விவாதத்தின் போது, டிரம்பின் பேச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் பைடன் தடுமாறியது அவரது கட்சி நிர்வாகிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
பைடனுக்கு பதிலாக வேறொருவரை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று ஜனநாயக கட்சி நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.