புதுடெல்லி: ‘வழக்குகளை, அவசர வழக்குகளாகப் பட்டியலிடுவதற்கும், விசாரணை நடத்துவதற்கும், வாய்மொழியாக சமர்பிக்க அனுமதி இல்லை என்றும், அதற்கு, மின்னஞ்சல்கள் அல்லது கடிதங்கள் அனுப்ப வேண்டும்’ என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா வலியுறுத்தியுள்ளார்.
வழக்கமாக, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வுக்கு முன், அன்றைய வழக்குகள் பட்டியலிடப்படுவதற்கு முன், வழக்கறிஞர்கள் தங்கள் வழக்குகளை அவசர வழக்குகளாக விசாரிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கின்றனர். தலைமை நீதிபதி, “வழக்குகளை அவசரமாக விசாரிக்க எழுத்துப்பூர்வமாகவோ, வாய்மொழியாகவோ இனி கோரிக்கை விடுக்க முடியாது.
மின்னஞ்சல் அல்லது எழுத்துப்பூர்வ கடிதம் வழங்க வேண்டும். அவசரநிலைக்கான காரணங்களை தெரிவித்தாலே போதும்,” என்றார். முன்னதாக, உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தனது முதல் அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நீதித்துறை ஒரு ஒருங்கிணைந்த, ஆனால் தனித்துவமான மற்றும் சுதந்திரமான ஆளும் குழுவாகும்.
அரசியலமைப்பு எங்களை நம்பியுள்ளது. அடிப்படை உரிமைகளின் பாதுகாவலராகவும் நீதியை வழங்குபவராகவும் இருக்கும் முக்கியப் பொறுப்பை நிறைவேற்றுவதே அரசியலமைப்பு பாதுகாவலரின் பணியாகும். சமத்துவம் மற்றும் அதிகாரத்தைப் பொருட்படுத்தாமல் நியாயம், வெற்றிபெற அனைவருக்கும் சம வாய்ப்பு மற்றும் பக்கச்சார்பற்ற தீர்ப்பு தேவை. இவை நமது அடிப்படைக் கொள்கைகளைக் குறிக்கின்றன.
குடிமக்களின் உரிமைகளின் பாதுகாவலர்களாகவும், சர்ச்சைகளுக்கு தீர்ப்பளிப்பவர்களாகவும் எங்களின் உறுதிப்பாட்டை எமக்கு வழங்கப்பட்டுள்ள ஆணை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. நமது நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் நீதியை எளிதாக அணுகுவது நமது அரசியலமைப்பு கடமையாகும்.
குடிமக்கள் புரிந்துகொண்டு நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் தீர்ப்பை வழங்குவதே முன்னுரிமை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் 51-வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா நேற்று பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திராருபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தலைமை நீதிபதியாக இருக்கும் சஞ்சீவ் கன்னாவின் பதவிக்காலம் மே 13, 2025 அன்று முடிவடைகிறது, மேலும் அவர் 6 மாதங்கள் மட்டுமே தலைமை நீதிபதியாக இருப்பார்.