செகந்திராபாத்: தெலுங்கானாவில் சரக்கு ரயில் தடம் புரண்டதால், சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன. பெல்லாரி – உத்தரபிரதேசம் இடையே இரும்பு ஏற்றிய சரக்கு ரயில், பெட்டப்பள்ளி மாவட்டம் ராமகுண்டம் மற்றும் ராகவபுரம் இடையே எதிர்பாராதவிதமாக தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சரக்கு ரயிலின் 44 பெட்டிகளில் 11 பெட்டிகள் தடம் புரண்டன. இதனால் வடமாநிலங்களில் இருந்து சென்னைக்கு வரும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாமதமாக வந்தன. இதேபோல், சென்னையில் இருந்து புறப்படும் ரயில்களும் தாமதமாகி வருகின்றன.
விபத்து காரணமாக நாக்பூர்-செகந்திராபாத் இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் (20101, 20102) இரு வழித்தடங்களிலும் ரத்து செய்யப்பட்டன. ஜெய்ப்பூர்-மைசூர், பிலாஸ்பூர்-நெல்லி, தானாபூர்-பெங்களூரு, நிஜாமுதீன்-ஹைதராபாத், செகந்திராபாத்-ஹிசார், செகந்திராபாத்-தர்பங்கா, செகந்திராபாத்-கோரக்பூர், ஜோத்பூர்-சென்னை, சாப்ரா-சென்னை, பாட்னா-செகந்திராபாத் உள்ளிட்ட பல எக்ஸ்பிரஸ் ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தடம் புரண்டது மற்றும் பாதை மாற்றம் காரணமாக 17 எக்ஸ்பிரஸ் ரயில்கள் திருப்பி விடப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ரயில்கள் வந்து செல்வதில் தாமதம் ஏற்படுவதால், பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.