போஸ்டன் கன்சல்டிங் குரூப் (பிஜிசி) நடத்திய புதிய ஆய்வில், ஏஐ தொழில்நுட்பத்திற்கு மாறுவதில் இந்தியா உலகிலேயே முன்னணியில் இருப்பதாக கூறுகிறது. இதுகுறித்து அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:- ஏஐ தொழில்நுட்பத்தை ஏற்று செயல்படுத்துவதில் சர்வதேச நாடுகளை விட இந்தியா முன்னிலையில் உள்ளது.
குறிப்பாக, ஃபின்டெக், சாப்ட்வேர் மற்றும் வங்கித் துறைகளின் செயல்பாடுகளில் AI இன் பயன்பாடு அதிகரித்துள்ளது. 30 சதவீத இந்திய நிறுவனங்கள் இத்தகைய வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கு மாறுவதன் மூலம் தங்கள் மதிப்பை அதிகரித்துள்ளன. AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான சர்வதேச சராசரி 26 சதவீதமாக இருக்கும் போது, இந்தியா அதை 30 சதவீதமாகத் தாண்டியுள்ளது.
இருப்பினும், இந்தியாவில் உள்ள 74 சதவீத நிறுவனங்கள் AI பயன்பாட்டிலிருந்து உறுதியான மதிப்பு மாற்றத்தை இன்னும் முழுமையாக உணரவில்லை. உலகெங்கிலும் உள்ள 4 சதவீத நிறுவனங்கள் தங்கள் மதிப்பை கணிசமாக அதிகரிக்க தங்கள் செயல்பாடுகள் முழுவதும் மேம்பட்ட AI திறன்களைப் பயன்படுத்துகின்றன. இவ்வாறு பிசிஜி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.